ரோஜா முள்ளா நீ… ?
நான் இன்னும் சாகவில்லை
காலவோட்டத்தின் அலையில்
அடிபட்ட துரும்பாக
அலைபட்டு ஓடிக் கொண்டே
இருக்கிறேன்
எனது ஓட்டத்தின்
எல்லைக் கோடு எதுவென்று
தெரியவில்லை
ஆனாலும் ஓடுகிறேன்…
அதிகாலை விழி திறக்கும்
மணிக்கூண்டின் சத்தத்துக்கும்
இரவு வணக்கம் சொல்லும்...
செங்காந்தள்
செங்களம் ஆடி வீழ்ந்த - எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!
(செவ்விதின் -செம்மையாக)
போராளி மருத்துவர்: தணிகை
கறுத்துப் போன வெளிநாட்டு வாழ்க்கையின் ஒற்றைப்புள்ளி…
வானம் மெல்லிய நீலநிற கம்பளியை போர்த்து கிடந்தது. ஒருவேளை தொடங்க போகும் பனி மழைக்கு பயந்து கிடந்ததோ என்னவோ அழகாக இருந்தது. சுமன் அந்த அழகை ரசித்தவனாய் எண்ணச் சிறகை பறக்க விட்டிருந்தான்....
பட்டாசு கொண்டாட்டம்
யாரப்பா இந்த நேரத்தில கோல் பண்ணுறது...? நாடு இராத்திரி நடுநிசிப் பேய்கள் போல அலறிய கைபேசியின் ஒலியைக் கேட்டு கண் விழித்துப் பார்த்தகணவன் கேட்டதற்கான பதிலைச் சொல்ல முன் கைபேசியை பார்க்கின்றாள் கமலா....
அன்புடன் முகிலா…
எனக்குத் தெரியும் இன்னமும் உன் நெஞ்சில் நான் உறங்குவேனென்று. ஏனெனில் அத்தனை வலிமையான காதல் உன்னுடையது. ஆனால் என்னுடைய காதல் அப்படியில்லையடா. கிட்டத்தட்ட எனக்கு ஏழுவருடங்களாக உன் நினைவு வந்ததில்லை. உன் நியத்தை...
மாலதி எனும் பெருந் தீ
மாலதி ! மானத் தமிழ் மறத்தி மாண்டு போகா வீரத் தீ பாரதி பாட்டிலே வடித்த தீ பிரபாகரன் தீரத்தில் தீட்டிய தீ மடந்தையர் மடமைகள் எரித்த ...
தங்கைக்கு ஓர் வாழ்த்து…
அன்புத் தங்கைக்கு...!
எதை எழுத
கேள்விகள் மனதில் தோன்றி
பேனாமுனை கிறுக்கி
கொண்டே இருக்கிறது
அவை எழுத்துக்கள் அல்ல
வெற்றுக் கோடுகள்
உற்று நோக்கினேன்
கோடுகள் நீயாக இருந்தன
உன்னை எப்படி எழுத
என்றெழும் நீரில் கண்கள்
நனைந்த போதும் அவற்றில்
நினைவுகள் கிறுக்கலானது
உன்னை எழுத முடியவில்லை
வார்த்தையை தேடித் தேடி
தேனெடுக்கும்...
புலம் பெயர் நாட்டில் ஒரு தாய்….
அப்பனைத் தவறவிட்டான்அசுரர்களால் அன்பையும்தொலைத்துவிட்டான் இப்போதெல்லாம் அவன்அழகான வாழ்வாக ஒன்றைமட்டும் மிச்சம் கொண்டான்
இருமிக் களைத்துச் சோர்ந்து போகும் பெற்றவளை அயராது உழைத்தாலும் கண்ணுக்கள் சுமந்து நிற்பான் மருந்தும் மாத்திரையும்மூச்சோடு கலக்க என்று ஒரு குப்பி காற்றழுத்தி
கொஞ்ச நாட்களாக இப்படித்தான் கழிந்தது அவர்களின் அன்பான வாழ்நாள்கள். அன்றொருநாள் அவசர வைத்திய...
முள்ளிவாய்க்கால் முடிவல்ல
நந்திக்கடலும் வட்டுவாகலும்நொந்துபோய் கிடக்கிறது வலி சுமந்த அடிமனதோடு…
பிஞ்சும் பூவும்
காயும் கனியுமாய்
சிந்திய இரத்தம்
காயாமலே
சிவந்தது தாய் முற்றம்
இரத்தமும் சதையும்
சேற்றுச்சகதியாய் மாற
மூச்சுக்காற்று தேடி
முனகியது வாழ்வு
காலின் கீழ் ஒட்டி பிசுபிசுத்தது
காயாமல் சுட்ட இரத்தம்…
யாரதென்று தீர்மானிக்க
இப்போது...
நிலவானவளின் நினைவுகள்
…
உன் வாசம் நிறைந்து
என் தேகம் சுமந்த
இனிய நினைவு ஒன்று
இன்றும் என்னோடு
பயணிக்கிறது…
காதலியாய் காத்திருந்த
வாழ்வைத் தூக்கி வீசிய
ஈழ வேலியின் காவல்ப்பூவே
உன்னை விட நெஞ்சமர்ந்து
என்னைத்...