நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில் அனைத்துக் கட்­சி­களும் பங்­கேற்கும்   வட்­ட­மேசை  மாநாட்டையும் சர்வ மத சந்­திப்­பையும் இன்­றைய தினம் நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­தி­ருக்­கின்றார்.

அதன்­படி சர்வ கட்­சி­களும் பங்­கேற்கும் வட்­ட­மேசை மாநாடு இன்­று­காலை 10 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

அதே­போன்று  சர்­வ­மத தலை­வர்கள் பங்­கேற்கும் மாநாடு இன்­று­மாலை 4 மணிக்கு  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.  இதற்­கான அழைப்பு  அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் சர்வ மதத்­த­லை­வர்­க­ளுக்கும் அனுப்­பப்­பட்­டுள்­ளது. 

அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்­கின்ற மற்றும்  அங்கம் வகிக்­காத அனைத்­துக்­கட்­சி­க­ளுக்கும் இந்த வட்­ட­மேசை மாநாட்டில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த நிலை­மையில்  அடுத்த கட்­ட­மாக என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது என்­பதை ஆராயும் நோக்­கி­லேயே இந்த சர்­வ­மத மற்றும்  சர்­வ­கட்சி மாநாடு இன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளன.