அமரிக்காவின் வேர்ஜினா கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக CNN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இச் செய்தியில், அங்கே பணியாற்றிக் கொண்டருந்த பணியாளர் ஒருவர் திடீர் என்று துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாகவும், அத் துப்பாக்கி சூட்டில் பலர் சாவடைந்தும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் குறித்த ஆயுததாரிக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் அதில் ஒரு காவல் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

இது தொடர்பான செய்திகள் தொடர்ந்தும் பதிவேற்றப்படும்