வவுனியாவில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிராக வவுனியாவில் பல்வேறு இடங்களில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்  சுவரொட்டிகளும்  ஒட்டப்பட்டுள்ளன.

‘மதவாதி, தேசதுரோகியாகிய ரிஷாட் பதியுதீனை உடனடியாக  நாடாளுமன்றத்திலிருந்து நீக்கவும்’ என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம், தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்துடன் ரிசாட்டுக்கு நெருக்கமானவர்களுக்கும் தொடர்புவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.