அரசியல் எதிரியை பழிவாங்கும் நோக்கிலேயே விசேட நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு அன்று நாட்டில் இருந்த தேவைக்கும் தற்போதுள்ள தேவைக்குமான வித்தியாசத்தை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.