ஆளில்லாத விமானங்களைப் பயன்படுத்தி மீண்டும் இலங்கை மீது தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என்ற அச்சத்திலும் பாதுகாப்பை வலுவாக்கும் நோக்கத்திலும் இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான் பரப்பில் ஆளில்லாத விமானங்கள் பறப்பதற்கு நேற்று இரவில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக வான் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இத் தடை எத்தனை நாட்களுக்கு என்று குறிப்பிடப்படவில்லை.