அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வானது
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில்   இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையின் கீழ் இயங்கும் 7 திலீபன் தமிழ்ச் சோலைகளில் கல்வி பயிலும் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் இன்று அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வை சிறப்புற எழுதியுள்ளனர் .புலம்பெயர் நாடுகளிலும் எம் வருங்கால சந்ததி ஊக்கமுடன் எம் தாய் மொழி தமிழை தொடர்ந்தும் வளர்த்து  தமிழர் அடையாளங்களை காக்க ஊன்றுகோலாக திகழ்வார்கள் என்பதில் ஐயமில்லை