2007ம் ஆண்டு அமைப்பில் இணைந்த இளம்தீ அடிப்படைப் பயிற்சிகளை முடித்து ஒரு பலம் மிக்க இரணுவ வீரனாக உருவெடுக்கின்றார். அக்காலத்தில் அவர் செய்த சிறந்த செயற்பாடுகள் பொறுப்பாளர்களுக்கு சிறந்த போராளியாக இனங்காட்டியது. அதன் காரணம் அவரை, கனரக ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி உள்வாங்கிக் கொள்கிறது. அங்கே சிறப்பாக பயிற்சிகளை
பெற்று முடித்து சிறந்த ஆசிரியராக உருவெடுத்தார். போராளிகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்தவரை பற்றிய நற்செய்திகள் அம்முகாம் பொறுப்பாளரால் கடற்புலிகளின் சிறப்புத் தளபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்பு சிறப்புத்தளபதியால் தனது மெய்பாதுகாப்புப்ணிக்கு இளம்தீ உள்வாங்கப்படுகிறார்.

அங்கு சிறிது காலம் மிகச்சிறப்பாக கடமையாற்றிக் கொண்டிருந்த வேளையில், தன்னை சண்டைக்கு அனுப்பும்படி அடிக்கடி சிறப்புத்தளபதியிடம்
கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கமைவாக தாக்குதலனிக்கு மாற்றப்படுகிறார்.வ்கடற்புலிகளின் தரைத்தாக்குதலணியின் அனேகமான
சமர்க்களங்களில் பங்குபற்றினான்.இவனது தனித்திறமையால் பொறுப்பாளர்களாலும் தளபதிகளாலும் பாராட்டப்பட்டான். எம்மால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலாகினும் சரி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புச் சமராகிலும் சரி அவனது சிறப்பான தாக்குதல்கள் எமது மண்ணை வன்பறிப்பு செய்ய வந்த எதிரிகளை சிதறடித்தது.


இவ்வாறு தான் 05.09.2008 அன்று மன்னாரில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிராக இறுதிவரை போராடி தமிழீழ மண்ணை முத்தமிடுகிறான். குறுகிய காலம் தான் இயக்கத்தில் பணியாற்றினான் என்றாலும் அக்காலப்பகுதியில் எவ்வளவு சாதிக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சாதித்துக் காட்டிய ஒருபெரும் வீரனாவான்.

புலர்வுக்காக எழுத்துருவாக்கம்..சு.குணா.

நாள்: 05.09.2021