மே 1 உழைப்பாளர்கள் அனைவருக்கும் தமது உரிமைகளை தொழில்தருணர் வர்க்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் புரட்சி நாளாகும். இந்த நாளினை, இலங்கையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தமது பரப்புரைக்குரிய நாளாக பயன்படுத்துவதும் அது தொழிலாளர் வர்க்கத்துக்காக உரிமை கேட்கும் நிகழ்வுகளாக மாற்றியமைப்பதும் வழமை. ஆனால் எந்த உழைப்பாளர்களின் நலங்கள் தொடர்பாகவும் அங்கே எதுவும் நடப்பதில்லை.

இந்த நிலையில் இந்த வருடம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் துன்பவியல் சம்பவங்களைத் தொடர்ந்து, பெரும்பாலான கட்சிகள் தமது நிகழ்வுகளை ரத்து செய்துள்ளதாக தெரிகிறது. நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதால் மக்களை பெருந்திரளாக கூட்டி வைத்திருக்கும் போது மீண்டும் எதாவது நடந்துவிடலாம் என்ற பயத்தில் அனைவரும் ரத்து செய்துள்ளதாக தெரியவருகிறது.

அதன்­படி ஐக்­கிய தேசிய கட்சி, தமிழ் முற்­போக்கு கூட்­டணி , ஜே.வி.பி. மற்றும் பொது­ஜன பெர­முன ஆகிய கட்­சிகள் மேதின கூட்டம் இடம்­பெ­றாது என்­பதை உறுதி செய்­துள்­ள­தோடு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது மேதின  கூட்டம் நடை­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் குறைவு என்றும் தெரி­வித்­துள்­ளது. 

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் உள்­ளிட்ட சில கட்­சிகள் இது தொடர்பில் எந்த அறி­வித்­தலும் விடுக்­காதபோதும் அவற்றின் கூட்­டங்­களும் இரத்துச் செய்­யப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.