இலங்கையில் என்ன நடக்கிறது? எதுவுமே புரியாத நிலையில் மக்கள் பதட்டத்துடன் காணப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து இதுவரை உத்தியோக பூர்வமாக 8 ஆவது குண்டு வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வேழாவதுகுண்டு. தெகிவளை விலங்குகள் காட்சியகத்துக்கு அருகில் வெடித்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படைகளால் கொழும்பு சூழப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் குண்டுகள் வெடித்து வருவதை மக்கள் அச்சத்தோடே நோக்குகிறார்கள்.  யாரால் யாரை நோக்கி இக் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன என்ற நிலை தெரியாது இருக்கும் போது தொடர்ந்தும் 8 வது குண்டும் வெடித்துள்ளது மக்களை உச்ச பயத்தில் உறையவைத்துள்ளது. 

மீண்டும் தொடருமா இக்குண்டு வெடிப்புக்கள். அல்லது இத்துடன் பாதுகாக்கப்படுவார்களா மக்கள் என்ற பயங்கரமான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இன்னும் வேடிக்கை பார்க்கப் போகிறதா? அல்லது தன் நாட்டு மக்களை மதத் தீவிரவாதத்திடம் இருந்து பாதுகாக்கப் போகிறார்களா? விடைதெரியாமல் கடந்து போகிறது இன்றைய இலங்கை மக்களின் பொழுதுகள்.