இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நடந்து கொண்டிருக்கும் தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இலங்கை அரசு முதல் கட்டமாக நாளை காலை வரை நடைமுறையில் இருக்கக் கூடியதாக ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தோடு சமூகவலைத்தளங்கள் யாவும் முடக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், இச்சட்டத்தை அறிவித்து பாதுகாப்பு படையினரால் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த அசம்பாவித நிகழ்வை கட்டுக்குள் கொண்டுவர அரசு முனைகிறது.

அன்பார்ந்த புலர்வு செய்திகளை வாசிக்கும் உறவுகளே! காவல்த்துறை அறிவித்ததற்கமைய வீட்டுக்குள் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். தேவையற்று வெளியில் வராதீர்கள்.