இன்று (06.05.2019 ) இலங்கையின் பள்ளிகள் யாவும் வழமைக்குத் திரும்புவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், அனைத்துப் பள்ளிகளும் வழமை போல கல்விச் செயற்பாடுகளை இன்று தொடங்கி இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆனாலும் நடந்து முடிந்த கோரச் சம்பவங்கள் மற்றும் பாடசாலை ஒன்றுக்கு வந்திருந்த மிரட்டல் போன்றவற்றை நினைவில் கொண்டு வழமை போல் மாணவர்களின் வருகை இருக்குமா என்பது சந்தேகமாக இருப்பதாகவும், தொடர்ந்து வரும் நாட்களில் அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வழமை போல மாணவர்களின் வரவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.