கொழும்புவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை குறித்து அவர்அகளின் உறவுகள் அறிந்து கொள்ளக் கூடியதாக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ருவீட்டர் சமூக வலைத்தளத்தின் கணக்கொன்று சுட்டிக் காட்டுகிறது. இது இந்தியாவின் உயர் ஸ்தானிய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்காக இருப்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே இவ்வாறான தொடர்புகளை ஏற்படுத்த விரும்பும் மக்கள் இவ்விலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வெண்களின் ஊடாக இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்தும், உங்கள் உறவினர்கள் குறித்த உடனடியான தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.