இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன், விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்றுமுன்னர் வந்தடைந்தார்.

இதன்போது பிரதமர் வந்த விமானத்துடன், பாதுகாப்புக்காக மற்றுமொரு விமானமும் இலங்கைக்கு வந்துள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று வரவேற்றுள்ளார். இந்த வரவேற்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் கலந்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான உத்தியோப்பூர்வ வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அதனைத்தொடர்ந்து அவர் பகல் 12 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்