உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் விளையாடின. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதல் தடுமாறிய இலங்கை அணி, 29.2 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தலைவருமான டிமுத் கருணரத்ன 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல், குசல் பெரேரா 29 ஓட்டங்களும் திசார பெரேரா 27 ஓட்டங்களை பெற்றஅதேவேளை,ஏனைய வீரர்கள் அனைவரும் 7 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களை எடுத்திருந்ததுடன்,குசல் மெண்டிஸ்,அஞ்சலோ மெத்தியூஸ்,இசுறு உடன ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தனர்.

நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி மற்றும் பெர்குசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் விழ்த்தினர்.

இதையடுத்து 137ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் குப்டில், கொலின் முன்றோ ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

அந்த அடிப்படையில் நியூஸிலாந்து அணி 16.1 ஓவரில் 137 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது
மார்ட்டின் குப்டில் 51 பந்துகளில் ஓட்டங்களும் 73 கொலின் முன்றோ 47 பந்துகளில் 58 ஓட்டங்களும் பெற்றனர்.