லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை 2019 திருவிழாவின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க தலைவர் டுபிளெசிஸ் நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

நல்ல சூரிய வெளிச்சம் உள்ளதுஇ பிட்சில் ஏதாவது இருக்கிறது என்றால் அது முதல் 1 மணிநேரத்திற்குத்தான் என்கிறார் டுபிளெசிஸ். பிட்ச் நன்றாக உள்ளது என்கிறார் இயான் மோர்கன்.

இங்கிலாந்து அணி: ஜேசன் ராய்இ ஜானி பேர்ஸ்டோஇ ஜோ ரூட்இ இயான் மோர்கன்இ ஜோஸ் பட்லர்இ பென் ஸ்டோக்ஸ்இ மொயின் அலிஇ கிறிஸ் வோக்ஸ்இ ஆதில் ரஷீத்இ ஜோஃப்ரா ஆர்ச்சர்இ லியாம் பிளெங்கெட்.

தென் ஆப்பிரிக்கா அணி: ஹஷிம் ஆம்லாஇ டி காக்இ எய்டன் மார்க்ரம்இ டுபிளெசிஸ்இ ரஸி வான் டெர் டூசன்இ டுமினிஇ பெலுக்வயோஇ டிவைன் பிரிடோரியஸ்இ கேகிஸோ ரபாடாஇ லுங்கி இங்கிடிஇ இம்ரான் தாஹிர்.