நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 14ஆவது போட்டியில் அவுஸ்ரேலியாவை 36 ஓட்டங்களால் இந்தியா வீழ்த்தியது.

லண்டன், ஹென்னிங்றன் ஒவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தவான் மற்றும் கோஹ்லியின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் கடினமான ஓட்ட இலக்கை அவுஸ்ரேலியாவுக்கு நிர்ணயித்தது.

அந்தவகையிவ், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணி சார்பாக, ஷிகர் தவான் 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 117 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அத்துடன், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 57 ஓட்டங்களையும் மற்றும் கார்த்திக் பாண்டியா 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஸ்ரொய்னிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, பற் ஹூம்மின்ஸ், ஸ்ரார்க் மற்றும் நைல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 353 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 50 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அந்தவகையில் அவ்வணி 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவுஸ்ரேலிய அணி சார்பாக, ஸ்மித் 69 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 56 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹரே 55 ஓட்டங்களையும் மற்றும் உஸ்மன் ஹவாயா 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், ஜஸ்பிரிற் பும்ரா 3 விக்கெட்டுகளைப் கைப்பற்றியதொடு, புவனேஸ்குமார் மற்றும், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அவுஸ்ரேலிய அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் உள்ளது.