நேற்று இலங்கையில் நடந்த வெடிகுண்டு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாது பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த வகையில் நேற்று இரவு முழுவதுமாக அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நேற்றையதினம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை பொலிஸாரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் 290 பேர் உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.