இன்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இருந்து AK- T56 வகை துப்பாக்கியின் ரவைகள் 40 ஐ இலங்கை இராணுவம் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் அந்த ரவைகள் தொடர்பாக விசாரணைகள் நடந்து வரும் நிலையில் அத் துப்பாக்கி ரவைகள் எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரியது என்றும் அவை காத்தான்குடி காவல்த்துறை அதிகாரிகளால் எமது பாதுகாப்பு காவல்த்துறைக்கு கொடுக்கப்பட்ட சட்டபூர்வமான ரவைகள் என்றும், அவை தொடர்பாக முறையான அறிக்கையினை என் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பதிகாரிகளுக்கு கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புல்லா.