இலங்கையில் நடந்த கொடூர தற்கொலைத் தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்தைப் பாடசாலைகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டது. அதன் பின்பான காலத்தில் இலங்கையின் அரச படைகள் நாடு முழுவதும், குறிப்பாக வடக்குப் பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடிகளை உருவாக்கி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரம் வீடுகள் , கோவில்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகம் என எல்லாப் பகுதியிலும் சோதனையிட்டனர்.

முஸ்லீம் தீவிரவாதிகளை பிடிக்க என்ற போர்வையில் தமிழர்கள் மீது கடுமையான வதை சோதனைகளை நடாத்தி வருகின்றனர். தேவையற்ற கைதுகளையும் செய்து தமிழ் மக்களின் இயல்பு நிலையை இல்லாது செய்துள்ளனர். இதே நேரம் சம்பவங்கள் நடந்த தென்னிலங்கையில் இவ்வாறான சோதனைச்சாவடிகள் காணப்படவில்லை. இத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் தென்னிலங்கையை சூழ்ந்திருக்கும் நிலையில் எதற்காக எம்மை மீண்டும் மீண்டும் சோதனை என்ற பெயரில் வதைக்கிறார்கள் இந்த சிங்கள அரச படைகள் என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எப்போது மீண்டும் இயல்பு வாழ்க்கையை வாழ விடுவார்கள்?