கடந்த வாரம் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பாரிய பின்னடைவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வருகிறது. அவ்வாறான நிலையில் இப்போது அவசரம் அவசரமாக காவல்த்துறை புதிய நடைமுறை ஒன்றை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக அந்தந்தப் பகுதிக்குரிய காவல்த்றை பணிமனைகளுக்கு உடனடியாக விபரங்கள் சேகரிக்கும் பணி கொடுக்கப் பட்டுள்ளது. அங்கே வசிக்கும் குடும்பங்களிலுள்ள அங்கத்தவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரால் விநியோகிக்கப்படும் குடும்பத் தகவல் திரட்டுப் படிவங்களுக்கமைவாக ஒவ்வொரு குடும்பமும் தத்தமது விவரங்களை வெகு விரைவாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டுள்ளனர்.

பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளினூடாகவும் இந்த அறிவித்தல்கள் அவ்வப்போது விடுக்கப்படுகின்றன.

பொலிஸார் விநியோகித்துள்ள குடும்ப விவர சேகரிப்பு படிவத்தில் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவரினதும் விவரங்கள் கோரப்பட்டுள்ளன.