இங்கையில் நடத்தப்பட்ட தொடர்ச்சி தற்கொலைக் குண்டுத் தாக்குதல்முகளின்ப்ப பின்டை அவசரகால தடைச் சட்டம் இலங்கை முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டதும் சந்தேகமானவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கிறது அந்த வகையில் இன்று முப்படையினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன்போது 6 முஸ்லிம்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கனகபுரத்தில் வியாபார நிலையங்கள் நடத்தும் நால்வர், லும்பினி விகாரைக்கு அருகில் ஒருவர், கனகாம்பிகை குளம் பகுதியில் வசித்து வந்த ஒருவர் என 6 பேர் நேற்று கைதாகினர்.

இவர்களுக்கும் கடந்த ஞாயிறன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்திய இஸ்லாமிய அமைப்புக்கும் தொடர்பு இருக்கின்றது எனக் குறிப்பிட்டே கைதாகினர் என்று கிளிநொச்சி காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து கிளிநொச்சியில் பதற்றம் நிலவுகின்றது. அங்கு முப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.