யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

‘புதிய வாழ்வு நிறுவனம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த நிறுவனத்தை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்துவைத்தார்.

குறித்த தொழிற்பயிற்சி நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.