குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் ஏன் நடைபெற்றது என்பதை பற்றி ஆராயாது குறுகிய அரசியல் நோக்கத்ததுடன் அரசும்,எதிர்க்கட்சியும் செயற்படுகின்றன .இது மிகவும் கேவலமான செயற்பாடு .இதனால் நாட்டில் தேசிய பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம் வெளியிட்டார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் அண்மையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன.இதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.இந்த சம்பவத்தினை முளுமையாக ஆராயாது அரசும் எதிர்க்கட்சியில் உள்ள மகிந்த தரப்பும் தங்களின் குறுகிய அரசியல் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்துடன் பலர் தொடர்பு பட்டிருக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அண்மைய நாட்களாக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.அவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றதா?அல்லது உண்மையிலேயே அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரிக்க வேண்டும்
என்று தெரிவித்தார்.