இலங்கையிலும், தென் தமிழீழத்திலும் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களை நாங்கள் தான் செய்தோம் என ஒளிப்மபட மற்றும் நிழல்பட ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டு ISIS என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில்,

அச் சம்பவத்தில் சாவடைந்த 300 க்கும் அதிகமான மக்களுக்காக பல்வேறு நாடுகளிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகள் புலம்பெயர் தேசத்து மக்களால் குறிப்பிடப்பட்ட நகரங்களில் இந்த வணக்க நிகழ்வுகள் செய்யப்பட்டன. குறிப்பாக ஜேர்மனியின் பேர்லின் நகரம், டென்மார்க்கின் கேர்லின் நகரம் ஆகியவற்றில் கூடிய மக்கள் விபரம் எழுதப்பட்ட பதாதைகள் முன்பாக மெழுகுவர்த்திகளை ஏற்றி மலர்வணக்கம் செய்து அம்மக்களுக்காக வணக்கம் செய்தனர்.

சுவிஸ், பிரான்ஸ், லண்டன், கனடா போன்ற நாடுகள் திகதி அறிவித்து மக்களை ஒருங்கிணைத்து வருகின்றன. குறித்த நாளில் அங்கும் வணக்க நிகழ்வுகள் இடம்பெற காத்திருக்கின்றன.