கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்களிலும் ஏனைய 2 ஹோட்டல்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் பலியாகியுள்ளதோடு பலர் படுகாயமடைந்துள்ளனர் .

கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் ,நீர்கொழும்பு கட்டான கடுவ பிட்டிய தேவாலயம் ,மட்டக்களப்பில் உள்ள தேவாலயம் ஒன்று மற்றும் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் ,சங்கரில்லா ஹோட்டல் உள்ளிட்ட 5இடங்களில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது .

இன்று கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு நாள் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த குண்டுவெடிப்புசம்பவங்கள் இடம்பெறுள்ளன .