நாட்டில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களில் சாவடைந்த 40 பேரின் உடலங்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உறவினர்கள் அவற்றைப் பார்வையிட்டு அடையாளங் கண்டு கொள்ள காவல்த்துறைக்கும் மருத்துவமனைக்கும் உதவுமாறும் கொழும்புத் தேசிய மருத்துவமனையின் அவசர அனர்த்தப்பிரிவுப் பணிப்பாளர் சமிந்தசமரக்கோன் தெரிவித்துள்ளார். அதே நேரம் 250 பேருக்கு மேலான காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரம் மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தாக்குதலில் 25 பேர் சாவடைந்ததாகவும் 75 பேருக்கு மேல் காயாமடைந்தவர்கள் வந்திருப்பதாகவும் மட்டக்களப்பு மருத்துவமனை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.