இலங்கையில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் பின் இலங்கை அதிபர் மைத்திரியினால் நாடுகள் நோக்கி விடப்பட்டிருந்த உதவி கோரலுக்கு அமைவாக இன்டபோல் காவல்துறை அதிகாரிகள் இலங்கைக்கு அவசரமாக பயணித்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி ஜூர்கன் ஸ்டொக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அவ்வறிக்கையில் தம்மிடம் உள்ள சர்வதேச பயங்கரவாத தரவுகளை அடிப்படையாக கொண்டு இப்போது நடந்த தாக்குதல்களை கையாள முடியும் என்றும் அதனூடாக பலரை கைது செய்து இப் பிரச்சனையில் இருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது செய்த, செய்து கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக தமிழ் மக்கள் எத்தனையோ கோரிக்கைகளை வைத்தும் கவனிக்காத சர்வதேசமும் சர்வதேச காவல்துறையும் இன்று அரசு வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று இலங்கை நோக்கி பயணித்திருப்பது இலங்கை மீதும் தமிழ் மக்கள் மீதும் சர்வதேசம் எவ்வாறான பார்வையை வைத்துள்ளது என்பதற்கு சான்றாகும்.