செங்களம் ஆடி வீழ்ந்த – எம்
செந்தமிழ் வீரர் நினைவுகள் பவனிவர
செங்கம்பளம் விரிக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!

செம்மொழியாம் எம்மொழியாலும்
செப்பிட முடியா பரம்பொருளை
செவ்விதின் உரைக்கிறாள்
செங்காந்தள் எனும் மலராள்!

(செவ்விதின் -செம்மையாக)

போராளி மருத்துவர்: தணிகை