தமிழீழ தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தபடி புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் தொழிலாளர் உரிமைகளுக்கான நாளாக கொள்ளப்படும், சர்வதேச தொழிலாளர் நாளில் கலந்து கொண்டிருக்கின்றார்கள். ஆட்தொகை குறைவாக இருப்பினும் பல்லின மக்களின் குரல்களுக்குக்கும் உரிமைக் கொடிகளுக்கும் இடையில் எம் கொடியும் நிமிர்ந்து நிற்பதை காணக் கூடியதாக உள்ளது.

சிக்காக்கோ நகரில் 18 ஆம் நூற்றாண்டு மூட்டப்பட்ட உரிமைத் தீ எவ்வாறு இன்று சர்வதேச அளவில் மூண்டெரிகிறதோ அதைப் போல எம் உரிமைக் குரலும் எம் மக்களால் சர்வதேச மயமாக்கப்படல் வேண்டும் என்பதே இந்த இடத்தில் நாம் எடுக்கக் கூடியதான முடிவாக இருக்கும்.