அன்புத் தங்கைக்கு…!

எதை எழுத

கேள்விகள் மனதில் தோன்றி

பேனாமுனை கிறுக்கி 

கொண்டே இருக்கிறது 

அவை எழுத்துக்கள் அல்ல 

வெற்றுக் கோடுகள்

உற்று நோக்கினேன் 

கோடுகள் நீயாக இருந்தன

உன்னை எப்படி எழுத

என்றெழும் நீரில் கண்கள் 

நனைந்த போதும் அவற்றில் 

நினைவுகள் கிறுக்கலானது 

உன்னை எழுத முடியவில்லை 

வார்த்தையை தேடித் தேடி 

தேனெடுக்கும் வண்டாக 

களைத்துவிட்டேன்

விழி நீர் தேங்கி அருவியாகி

பாய்ந்தோடிய போது 

விழிகள் தேடிக் 

கொண்டே இருந்தன

இரு மருங்கும் ஓங்கி 

வளர்ந்திருந்த நினைவு 

மரங்கள் உன்னை பற்றி 

பாட்டெழுத வார்த்தை தந்தன 

“அண்ணா” உறவெனும் 

அன்பினில் நெகிழ்வாய் நீ…

தங்கையே என்றால் 

மகிழ்வில் திகழ்வாய் நீ… 

புன்னகைக்கும் உனக்குமான 

உறவு சமாந்தரக் கோடு

அன்புக்கும் எழிமைக்கும் நீ தந்தது

இமையத்தின் சிகரம்

அன்று நாம் மூ பத்து பேர் – 

ஒரு குடையில் மழை தவிர்த்தோம் 

வானவில் வண்ணமாகி 

நீ நீயாக இருந்தாய் 

இன்று சூறைக்காற்று சுற்றி 

சென்ற தனிமரம் நான் 

நீயுமின்றி மழை தவிர்க்கும் 

குடையுமின்றி…

இதற்குள் எப்பிடி எழுதுவேன் 

தெரியவில்லை. 

ஆனாலும் கோர்க்கிறேன் மாலையாய்

ஓடி ஓடி சேர்த்த எழுத்துக்களை 

உன் பூவிதழ் தவளும் 

புன்னகை கண்டிட

தவிக்குது அண்ணனின் 

அன்பு உள்ளம்… 

பூக்களை கூடையில் 

மொண்டு நான் தந்திட  

பூக்குளியல் நீ 

செய்திட வேண்டும் 

தாவியே வரும்

தென்றல் காற்றினில் 

தவழும் சுகந்த வாழ்ந்தினை

ஏற்று மகிழ்ந்திட வேண்டும் 

புன்னகைக்க மறந்திடா புன்னகையே 

உன் கன்னங்கள் சிவந்திட 

நான் கொண்டு வரும் 

தமிழ் மாலையை நீ சூடிட வேண்டும் 

தமிழில் பிறந்து தமிழில் வளர்ந்து 

தமிழுக்காய் வாழும் தமிழ் பூவே

உதித்த நாளிதை இனிதாக்கியே 

Attachment.png

வாழ்த்துக்கள்   தங்கையே