தமிழகத்தில் சிறுபோகத்துக்காக தண்ணீரைத் திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3ஆவது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உட்பட்ட 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்திய தமிழக அதிகாரிகள்,  தமிழகத்துக்கு திறந்துவிடப்படவேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் முதலாம் திகதி முதல் திறந்துவிடுமாறு கோரினர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.