தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ள நிலையில், இதுகுறித்து ஆராய மத்திய அரசு  தீர்ப்பாயமொன்றை  அமைத்துள்ளது.

இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில், ஆணையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணையம், விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் உள்ளதா, இல்லையா என்பது பற்றி ஆராயவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு ஈழ விடுதலை அமைப்புக்களும் 80களின் நடுப்பகுதியில் தங்களுடைய செயற்பாடுகளுக்கான பின்தளமாக இந்தியாவை பயன்படுத்தி வந்தன. இந்தியாவினால் ஆயுதப் பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.