தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு நன்மையானது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் வகையிலேயே புதிய அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டதாகவும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணைபோயுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.