யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாலயத்துக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு காற்றாலை அமைக்கப்படுகின்ற இடம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த சாவக்சேரிப் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், காற்றாலை பொறியியலாளருடனும் கலந்துரையாடினர்.

இரண்டு தரப்புக்களுடனும் கலந்துரையாடிய பொலிஸார் நாளை தென்மராட்சி பிரதேச செயலகத்தில் இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவது என முடிவெடுத்தனர்.