மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்தில் இன்றுவைத்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தரப்பினருடன் விரிவான முற்போக்கு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பிலும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அந்த கூட்டணிக்கு தலைவர் ஆகுமாறும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மகஜரை கையளிக்கும் நிகழ்வில் நிமல் சிறிபால டி சில்வா, தயாசிறி ஜெயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தாபா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, வீரகுமார திஸாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜயவிக்கிரம, மோகன் லால் கிரேரோ மற்றும் சாந்த பண்டார உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.