இலங்கையில் நடந்த பாரிய தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையால் சந்தேகத்தின் அடிப்படையில் பல கைதுகள் இடம்பெற்றன. அக் கைது நடவடிக்கைகள் மூலம் பல பயங்கரவாதிகள் அடையாளப்படுத்தப்பட்டார்கள். தொடர்ந்தும் கைதுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில்

வெலிமட, நுகதலாவ பகுதியில் இராணுவ, விமானப்படையின் ஆடைக்கு ஒப்பான ஆடைகள் மற்றும் மேலும் சில பொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 58 தேசிய அடையாள அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.