இலங்கையில் நடந்த கொடூரமான தொடர் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு நடைமுறையில் உள்ள நிலையில் தொடர்ந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலையும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக அறியப்படுகிறது.

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்தியான் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து, 87 டெட்டனேட்டர் வகை வெடிப்பொருட்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளார் தெரிவித்துள்ளார்.மேற்படி வெடிபொருட்கள் இன்று நண்பகல் மீட்கப்பட்டடுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதே வேளை நாட்டில், 8 இடங்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில், சுமார் 290 பேர் மரணித்துள்ளதாகவும், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.