கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.04.2019) சர்வதேசத்தையே உலுக்கி எடுத்த தொடர் குண்டுத் தாக்குதல் இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பகுதிகளில் நடாத்தப்பட்டது. இத் தாக்குதலில் 290 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் சாவடைந்ததுடன் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்த்துறையால் கைது செய்யப்படுகிறார்கள். இது இவ்வாறு இருக்க, இதுவரை உரிமை கோரப்படாது இருந்த இத்தாக்குதல் இன்று ISIS என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பால் உரிமை கோரப்பட்டிருப்பதாக அமாக் என்ற ஊடகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வூடகம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்ட போதே இவ்வாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.