உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டியில், இலங்கை அணியும், நியூஸிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

கார்டிப் மைதானத்தில் இன்று உள்ளூர் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்னவும், நியூஸிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

உலகக்கிண்ண வரலாற்றை பொறுத்தவரை, இதுவரை இரு அணிகளும் இதற்கு முன்னதாக 10 போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் இலங்கை அணி ஆறு முறையும், நியூஸிலாந்து அணி நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

இதேவேளை, இரு அணிகளினதும் கடந்த கால பெறுபேறுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, நியூஸிலாந்து அணியே வலுவான அணியாக உள்ளது.

எனினும் இப்போட்டியில், இலங்கை அணி அதிர்ச்சி கொடுக்குமா அல்லது நியூஸிலாந்து அணியிடம் வீழுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பிரிஸ்டொல் மைதானத்தில் இப்போட்டியில், அவுஸ்ரேலியா , ஆப்கானிஸ்தான் அணிக்கு குலாபதின் நய்ப்பும் தலைமை தாங்கவுள்ளனர்.

கத்துக்குட்டி என்ற சிறு வட்டத்திலிருந்து அபரீத வளர்ச்சியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியிருந்து. அதே உத்வேகத்துடன் தற்போது அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வோர்னரின் மீள் வருகையால் இரட்டிப்பு வலுவடைந்துள்ள அவுஸ்ரேலியா அணி, சிறப்பான வளர்ச்சியை எட்டி சிறந்த நிலையில் உள்ளது. எனவே இப்போட்டியில் எந்த அணி சாதிக்கும் என்பதனை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.