தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நெதர்லாந்து திருவள்ளுவர் கல்விக் கலைக் கழகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று உத்திரக்ற் ரோர்மொண்ட் அசன் பேவர்வைக் ஆகிய நிலையங்களில் தமிழ்மொழி பரீட்சை நடைபெற்றது. சுமார் 460 மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள். திருவள்ளுவர் கல்விக் கலைக் கழக ஆசிரிய ஆசிரியைகள் ஒழுங்கமைக்க கல்விக் கழக பொறுப்பாளரினதும் நெதர்லாந்து கிளைப்பொறுப்பாளரினதும் மேற் பார்வையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.