இலங்கை காவல்த்துறையின் உயர்நிலை பதவியான பொலிஸ்மா அதிபராக இருக்கும் பூஜித்த ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலகுமாறு இலங்கை அரச தலைவர் மைத்திரி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதன் அடிப்படைக் காரணம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புக்களுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குறைபாடுகளே என அவர் தெரிவித்ததாகவும், அத் தவறை பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மைத்திரி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் பதவி விலகுவாரா அல்லது விலக்கப்படுவாரா இல்லை பதவியில் தொடர்வாரா என்பதை காத்திருந்து பார்ப்போம்.