வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பேரருட் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார்.

இன்று காலை ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், விசேட ஆரதானைகளும் இடம்பெற்றது.

இதன்போது சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் அருட்சாதனம் ஆயரினால் வழங்கிவைக்கப்பட்டது.

பொலிஸாரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒமந்தை பங்கைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.