தமிழீழ தேசியத் தலைவரின் நிழல்படம் மற்றும் மாவீரர்களது நிழல் படங்களை தமது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்ததாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுவது தொடர்பாக இன்று நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு முன்நகர்த்தப் படுகிறது.இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (08.05.2019) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கில் விடுதலை தொடர்பாகவும் அல்லது அவர்களுக்கான பிணைதொடர்பாகவும் இன்று தீர்ப்புகிடைக்கும் என்ற நிலையில் சட்டமா அதிபரிடமிருந்து எதுவித பதிலும் கிடைக்காததால் கைதான மாணவர்களை வருகின்ற 16.05.2019 வரை விளக்கமறியலில் தடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாடுகளை எடுத்துக்கூறியபோது அங்குள்ள பொலீஷாருக்கு விளங்கியுள்ளது சட்டமா அதிபரிடமிருந்து 16 ந்திகதிக்கு முன்னர் சாதகமான தீர்ப்பு கிடைக்குமென மாணவர்கள் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகளில் ஒருவரான திரு. சுபாஷ் அவர்கள்…