இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று தனது வாரணாசி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாரணாசி தொகுதியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பிரதமர் மோடி காசி விசுவநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நடைபெற்று முடிந்த இந்திய மக்களவை தேர்தலில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 லட்சத்து 80 ஆயிரத்து 334 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், தன்னை வெற்றிபெறச் செய்த தனது தொகுதிமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இன்று வாரணாசி சென்றிருந்த நரேந்திர மோடி, அங்கு பல இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்தார்.