பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து நடாத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வின் இணையவழித் தேர்வில் பகுதி 1 மற்றும் பகுதி 2 ஆகியவற்றில் அருளானந்தம் ஜெகதீஸ்வரி அவர்கள் தலா 100 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இணைய வழித்தேர்வில் ஒரு பகுதியில் மட்டுமே 100 புள்ளிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இரு தேர்விலும் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றது இதுவே முதன் முறையாகும். அத்தோடு பிரான்சில் அமலதாஸ் எனும் மாணவனும் இணையவழித் தேர்வு ஒன்றில் 100 புள்ளிகள் பெற்றுள்ளார்.

அத்தோடு இத்தேர்வில் அனைத்து மாணவர்களும் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தேர்வில் தோற்றிய மாணவர்களுள் பெரும்பான்மையானவர்கள் பிரான்சில் பிறந்து தமிழ்ச்சோலைகளில் வளர்தமிழ் 12 வரை கல்வி பயின்ற இளைய தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.