பாரினில் பல்லாயிரம் ஆண்டுகள்
பண்பட்ட தமிழினத்தின் பாரம்பரிய நாட்டார் கலைவடிவங்களில் தலையாயது கூத்து.

மக்களின் மண்வாசனையையும்
மக்களின் வாழ்வாதரங்களையும்
மக்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும்…

வெளிப்படுத்தும் வகையில் அமைவதே கூத்துக்கலை.

சந்தம் கலந்து சங்கதி சொல்லும் கவிதைகளை விடவும் அழகாக
கூத்துக்கள் பல்வேறு சேதிகளை சுவைபட சமூகத்துக்கு சொல்கின்றன.

01)வடமோடிக் கூத்து
02)தென்ம்மோடிக் கூத்து
03)வசந்தன் கூத்து
04)மகிமக் கூத்து
05)பறைமேளக் கூத்து
06)காத்தவராயன் கூத்து
என பல வகையான
கூத்துக்களுக்கு நாங்கள்
சொந்தக்கார்கள் ஆகும்.

இதற்கு வலுச் சேர்க்கிறார்கள் புலத்தில் வாழும் இளையவர்கள். இதில் ஒரு இளையவள் தான் செல்வி எழிலினி.

மேனாட்டில் மட்டுமல்லாமல்
மேதினியெங்கும்
மேன்மை அடையும் எம் கலையையும் அவற்றைத் திறம்படச் செய்து காட்டும் எம் இளையோருக்கு தினம் ஊக்கமும் ஊட்டமும் நல்குவோம்.

நன்றி

-வயவையூர் அறத்தலைவன்-