முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனவழிப்பின் சாட்சியம் என்ற பெயரில் புதிய நிழல்ப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப் புகைப்படம் “போர்க்களத்தில் ஒரு பூ” என்ற பெயரில் இந்தியாவில் இருந்து ஊடகப் போராளி இசைப்பிரியா பற்றி தெளிவற்ற ஒரு கதையை உருவாக்கிய இயக்குனர் ஒருவரால் சித்தரிக்கப்பட்ட புகைப்படமாகும். இதனை அத்திரைப்படத்தின் ஒளிவடிவத்தில் இருந்து நிழல்பிரதி எடுக்கப்பட்ட நிலையில் அப்புகைப்படத்தை முள்ளிவாய்க்காலின் சாட்சியம் என்று பொய்யாக பரப்பி வருகின்றார்கள். தயவு செய்து அவ்வாறு பகிராதீர்கள். 

உண்மையான சாட்சியங்களை பகிருங்கள். பொய்யானவற்றை பகிர்வதனால் உண்மைகளும் பொய்யாகவிடும் அபாயத்தை உணருங்கள்.