தலைமன்னார் பிரதான வீதியின் புதுக்குடியிருப்பு சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஏ.அசோக்குமார் வயது-25 என்ற இளைஞன் உயிரிழந்தார்.

இன்று குறித்த இளைஞனின் பிறந்த நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞனும், மற்றுமொருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி வயது-32 என்பவர் படுகாயமடைந்துள்ளார்.