சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மன்னார் வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தரம் குறைந்த மருந்துகள் நீரிழிவு மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவித்து சுகாதார அமைச்சருக்கு எதிராக பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதன்போது வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா? நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா? போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.